×

நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியீடு: ஊராட்சி தலைவர் புது முயற்சி

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் சிறுதாவூர் ஊராட்சி தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வேதா அரு. தேர்தலின் போது கிராமசபை கூட்டங்களில் ஊராட்சி வரவு, செலவு குறித்த தகவல்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடுவேன் என உறுதியளித்தார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசு தின விழா ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. அப்போது, தேசிய கொடியை ஏற்றி வைத்த ஊராட்சி மன்ற தலைவர் வேதா அருள், சிறுதாவூர் ஊராட்சியில் பொறுப்பேற்கும்போது இருந்த நிலுவைத் தொகை, அதன் பிறகு பல்வேறு திட்டங்களின் கீழ் அரசிடம் இருந்து வரப்பெற்ற தொகை உள்பட அனைத்தையும் துண்டு பிரசுரமாக வெளியிட்டு பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும், ஊராட்சி பணிகள் தொடர்பான சந்தேகங்கள் குறித்து ஊராட்சி அலுவலகத்தில் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றார்.

Tags : Panchayat , Publication of White Paper on Finance: New initiative by Panchayat leader
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு