முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜன.27) காணொலி வாயிலாக நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, திமுகவின்  முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இன்று  மாலை வெளியானது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாளை திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் கூட்டம் கொரோனா பரவல் காரணமாக  காணொலி மூலம் நடைபெற உள்ளது.

Related Stories: