நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; ஒரே கட்டமாக பிப். 19 அன்று வாக்குப்பதிவு; பிப். 22 அன்று வாக்கு எண்ணிக்கை: தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல்  ஒரே கட்டமாக நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் பேட்டியளித்தார். 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். 21 மாநகராட்சிகளில் உள்ள 1,064 வார்டுகள், 138 நகராட்சிகளில் உள்ள 3,468 வார்டுகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

* வரும் 28ம் தேதி முதல் பிப். 4ம் தேதி வரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யலாம்

* வேட்புமனு பரிசீலனை பிப். 5-ம் தேதி நடைபெறும்

* வேட்புமனு திரும்ப பெறும் நாள் பிப்.7-ம் தேதி நடைபெறும்

* பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்

* மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும்

* கொரோனா கட்டுப்பாடுகளால் தேர்தல் பேரணி பிரசாரத்திற்கு அனுமதி இல்லை

* சென்னையில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக செயல்படுவார்கள்

* 80,000 காவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்

* வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை சிசிடிவி கண்காணிப்புடன் நடைபெறும்

* பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறிந்து அதிகபட்சமாக பாதுகாப்பு வழங்கப்படும்; நுண் பார்வையாளர்கள் மற்றும் வெப் ஸ்ட்ரீமிங் மூலமும் கண்காணிப்பு

* தமிழ்நாடு முழுவதும் 31,029 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்

*  சென்னை மாநகராட்சியில் 5,794 வாக்குசாவடிகள் அமைக்கப்படும்

* சென்னை உள்பட 21 மாநகராட்சிகளில் 15,158 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என அறிவிப்பு

* கொரோனா பரவலை தடுக்க 13 பாதுகாப்பு உபகரணங்களை வழங்க ஏற்பாடு

* காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்

* அனைத்து இடங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குப்பதிவு நடைபெறும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கான டெபாசிட் தொகை விபரங்கள்:

Image

Related Stories: