யுவராஜ் - ஹேசல் தம்பதிக்கு ஆண் குழந்தை : தனியுரிமையை மதிக்க கோரிக்கை

புதுடெல்லி:  யுவராஜ் சிங் - ஹேசல் கீச் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அவர்கள் தங்களது தனியுரிமையை மதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மற்றும் அவரது மனைவி ஹேசல் கீச் ஆகியோருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து யுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘என்னுடைய ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையை கடவுள் கொடுத்திருக்கிறார் என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உங்களின் ஆசீர்வாதத்தை வேண்டுகிறோம். மேலும் எங்களது தனியுரிமையை மதிக்க விரும்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங் - ஹேசல் கீச் தம்பதிக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னதாக யுவராஜ் மற்றும் ஹேசல் ஆகிய இருவரும் கடந்த 2016ம் ஆண்டு பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். நடிகையான ஹேசல் கீச், பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் கரீனா கபூர் கான் நடித்த ‘பாடிகார்ட்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: