‘டிக்டாக்’ பிரபலத்துக்கு காங்கிரசில் ‘சீட்’ : ஹஸ்தினாபூர் தொகுதியில் போட்டி

லக்னோ: உத்தரபிரதேசத்தில் டிக்டாக் பிரபலம் அர்ச்சனா கவுதம், ஹஸ்தினாபூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். உத்தரபிரதேச மாநிலம் ஹஸ்தினாபூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அர்ச்சனா கவுதம் அறிவிக்கப்பட்டுள்ளார். மீரட் பகுதியை சேர்ந்த இவர் மும்பைக்கு சென்று டிக்டாக், ஊடகம், சினிமா, மாடலிங் போன்ற துறைகளில் பணியாற்றி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மீரட்டில் பிறந்த நான், கங்கா நகரின் ஐஐஎம்டி கல்லூரியில் தகவல் தொடர்பியல் படிப்பை முடித்தேன். சினிமா தொழிலில் ஆர்வம் கொண்ட நான், மாடலிங் தொழிலைத் தொடர மும்பை சென்றேன். அதற்கு முன்னதாக டிக்டாக் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகமானேன். கடந்த 2015ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானேன்.

அச்சு, தொலைக்காட்சிகளில் விளம்பர பிரசார மாடலிங் தொழில் செய்து வந்தேன். எனது முதல் படமான கிரேட் கிராண்ட் மஸ்தி வெற்றி பெற்றது. கடந்த 2014ல் மிஸ் உத்தர பிரதேசம் பட்டம் பெற்றேன். பின்னர் மிஸ் பிகினி இந்தியா - 2018 பட்டத்தையும் வென்றேன். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறேன். காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தேன். தற்போது ஹஸ்தினாபூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன்’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

Related Stories: