தமிழகத்தில் ரூ.424 கோடி மதிப்பில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் ரூ.424 கோடி மதிப்பில் 13 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஈரோடு, கடலூர், கரூர், காஞ்சிபுரம், திருத்தணி, ராணிப்பேட்டை, திண்டிவனம், திருவண்ணாமலை சங்கரன்கோவில் உள்ளிட்ட 13 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என கூறியுள்ளது.

தமிழ்நாடு உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படுகின்றன என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ. 424 கோடி மதிப்பில் 13 இடங்களில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பேருந்து நிலையங்கள் அமைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் பணி விரைவில் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: