×

யு மும்பாவை பழி தீர்க்குமா பெங்களூரு புல்ஸ்?

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 77வது லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த போட்டியில் இரு அணிகளும் மாறிமாறி புள்ளிகள் எடுத்தன. கடைசி வரை த்ரிலிங்காக நடந்த இந்த ஆட்டம் 39-39 என சமனில் முடிந்தது. அரியானா 14வது போட்டியில் 6 வெற்றி, 5 தோல்வி, 3 டை என42 புள்ளியுடன் 3வதுஇடத்தில் உள்ளது.

தெலுங்கு டைட்டன்ஸ் ஒரு வெற்றி, 10 தோல்வி, 3 டை என 22 புள்ளியுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.  இன்று இரவு 7.30 மணிக்கு யு மும்பா-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் யு மும்பா 46-30 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. அதற்கு பெங்களூரு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இன்று களம் இறங்குகிறது.

Tags : Bangalore Bulls ,Mumbai , U Mumba, Revenge, Bangalore Bulls
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!