கோஹ்லியை நீக்கியதில் பிசிசிஐ தவறு செய்து விட்டது: பாக். மாஜி கேப்டன் சொல்கிறார்

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் அளித்துள்ள பேட்டி: ஐபிஎல்லில், இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் உள்ளது. இந்திய கிரிக்கெட் இப்போது நிதி ரீதியாக மிகவும் வலுவாக உள்ளது. எனவே இந்த சமீபத்திய மாற்றங்கள் அல்லது தோல்விகள் இந்திய கிரிக்கெட்டில் பாதுகாப்பு மற்றும் அதன் பிராண்டை மோசமாக பாதிக்காது. டெஸ்டில் கேப்டனாக ரோகித்சர்மா எவ்வளவு உந்துதலாக இருப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கோஹ்லி தனது கேப்டன்சி மற்றும் அணிக்கு ஆற்றலையும் நோக்கத்தையும் கொண்டு வந்தார். ஒரு நாள் அணியின் கேப்டனாக கோஹ்லியை நீக்கியதில்  பிசிசிஐ கையாண்ட விதத்தில் தவறு செய்துவிட்டதாக நான் நினைக்கிறேன். இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.இந்திய அணியில் நிலவும் நிச்சயமற்ற சூழலால் தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி தோல்வியடைந்தது, என்றார்.

Related Stories: