நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா

ஐதராபாத்: நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ஆச்சார்யா, போலா சங்கர், காட்பாதர் ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.  இந்நிலையில் இப்போது மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து சிரஞ்சீவி டிவிட்டரில் கூறும்போது, ‘லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதனால் நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: