கபிஸ்தலம் பகுதியில் சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

கும்பகோணம்,ஜன.26: கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதி சாலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம் அருகே பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் கிராமத்தில் பெருமாள் கோவில் தெருவில் உள்ள மின் கம்பம் சாலையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது .இந்த மின் கம்பம் இங்கு அமைக்கப்பட்டு இருப்பதால் இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் மற்றும் லாரி போன்ற வாகனங்கள் வந்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

விவசாய பணிகளுக்கு உரம் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச்செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே சாலையின் நடுவில் அமைந்துள்ள இந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி சாலையின் ஓரத்தில் மாற்றியமைத்து தந்தால் இந்த பகுதியில் கனரக வாகனங்கள் மற்றும் விவசாய பணிகளுக்கு செல்லும் வாகனங்களில் இலகுவாக செல்ல ஏதுவாக இருக்கும். எனவே போர்க்கால அடிப்படையில் இந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி சாலை ஓரம் அமைத்து தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: