தமிழ்நாட்டில் உள்மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களான ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, மதுரை, ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விருதுநகர், தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 28-ல் தென்கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 29, 30-ல் தென்கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும், ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.

ஜனவரி 28, 29 ஆகிய நாட்களில் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு 2 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: