×

இந்தியாவில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: மொத்த பாதிப்பு 4 கோடியை கடந்தது..!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.91 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 2,85,914 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,00,85,116 ஆக உயர்ந்தது.

* புதிதாக 665 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,91,127ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,99,073 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,73,70,971 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 22,23,018 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 93.23% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.23% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.55% ஆக குறைந்துள்ளது.

*இந்தியாவில் 1,63,58,44,536 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 59,50,731 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : India , Corona impact high in India again: Total damage exceeds 4 crore ..!
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்