×

முடிவிற்கு வரும் அலை?.. அமெரிக்கா, பிரிட்டனில் கொரோனா பாதிப்புகள் சரிவு.. சர்வதேச அளவில் குறையும் பாதிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35.89 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 கோடியே 89 லட்சத்து 94 ஆயிரத்து 591 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 88 லட்சத்து 58 ஆயிரத்து 879 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 28 கோடியே 45 லட்சத்து 02 ஆயிரத்து 350 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 56 லட்சத்து 33 ஆயிரத்து 362 பேர் உயிரிழந்துள்ளனர்.

*உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 3,271,790 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். 358,994,591 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் வேகமாக குறைந்து வருகிறது. அங்கு புதிதாக 436,209 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 73,442,322 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

*பிரிட்டனில் தினசரி கேஸ்கள் கடந்த இரண்டு நாட்களாக 1 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. பிரிட்டனில் 16,047,716 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

*பிரான்சில் தினசரி கேஸ்கள் 1 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. 17,302,548 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

*இத்தாலியில் 11,090,493 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 76,341 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

*இந்தியாவில் தொடர்ந்து தினசரி கேஸ்கள் 2.5 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இதுவரை 40,082,742 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : USA ,UK , Ending wave? .. Corona impacts decline in US, UK .. Decreasing impact internationally
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!