பிபின் ராவத் ஐம்பொன் சிலை; கும்பகோணத்தில் தயாராகிறது: டெல்லி போர் நினைவு சின்னத்தில் நிறுவ ஏற்பாடு

கும்பகோணம்: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். பிபின் ராவத்தின் வீரத்தை போற்றும் விதமாக முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஷைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பேர் பவுண்டேஷன் சார்பில் 120 கிலோ எடையில் அவரது மார்பளவு ஐம்பொன் சிலை தயாரித்து அதனை டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சிற்பக் கூடத்தில் ஐம்பொன்னால் ஆன பிபின் ராவத் சிலை தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக களிமண்ணில் அவரது உருவம் வடிவமைக்கப்பட்டு ஐம்பொன்களை காய்ச்சி ஊற்றி முழு உருவம் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த பணிகளை முன்னாள் ராணுவ வீரர்கள், நேற்று நேரில் பார்வையிட்டனர்.

Related Stories: