நீதிமன்றங்களை திறக்க கோரி சென்னை ஐகோர்ட் முன் 11ம் தேதி ஆர்ப்பாட்டம்: வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு

நாகர்கோவில்: தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தில் நேற்று நடந்தது. நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க தலைவர் மரிய ஸ்டீபன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு மாநில தலைவர் நந்தகுமார் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்க பொறுப்பாளர்கள் பேசினர். இதில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உடனடியாக நீதிமன்றங்களை திறந்து நேரடி விசாரணை நடத்த வேண்டும். இல்லையென்றால் வருகிற பிப்.11ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் முன் தமிழகம் தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் ஒன்று கூடி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். வழக்கறிஞர்களுக்கு கொரோனா கால நிவாரணமாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: