நெய்தவாயல் ஊராட்சியில் அவசர ஆலோசனை கூட்டம்

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் நெய்தவாயல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. 9 வார்டு உறுப்பினர்களை உள்ளடக்கிய நெய்தவாயல் ஊராட்சி மன்றத்தின் தலைவராக சிபிஐ கட்சியைச் சேர்ந்த பாலன் என்பவரும் துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த ராஜேஷ் என்பவரும் பதவி வகிக்கின்றனர்.  இந்நிலையில், திடீரென ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கொண்ட அவசர கூட்டம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேஷ் மின்கட்டணம், இறுதிச்சடங்கு பணப்பரிவர்த்தனைகளுக்கான காசோலைகளில் கையெழுத்திடுவதில்லை எனவும், அதன் காரணமாக ஊராட்சி பணிகள் பாதிப்பதால் காசோலைகளில் ஊராட்சி மன்ற தலைவருடன் இணைந்து துணைத் தலைவராக கையெழுத்திட அனுமதி வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் மொத்தமுள்ள 9 வார்டு உறுப்பினர்களில் 5 பேர் கையெழுத்திட்டு அதிகாரிகளிடம் வழங்கினர்.

Related Stories: