நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு நேர்காணல்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

கூடுவாஞ்சேரி:  நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணலை, அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு திமுக சார்பில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி நடந்து முடிந்தது. இதைதொடர்ந்து, விருப்பு மனு அளித்த 72 பேரிடம், நேற்று நேர்காணல் நடந்தது. நகர பொறுப்பாளர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், முன்னாள் பேரூராட்சி மன்ற துணை தலைவர் கே.பி.ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்து கொண்டு 72 பேரிடம் நேர்காணல் நடத்தினர். இதில் 15 பெண்களும், 15 ஆண்களும் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டனர்.  முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் பத்மநாபன், குமரவேல், மதிராஜி, சதீஷ்குமார், ரவி, டில்லி, மாசிலாமணி, நிர்வாகிகள் ராமமூர்த்தி, ஜி.எம்.கார்த்திக், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் எம்கேபி சதீஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: