20 நாட்களில் வடகொரியா 5வது முறையாக மீண்டும் ஏவுகணை சோதனை

சியோல்: அமெரிக்காவின் பொருளாதார தடை, ஐநா எச்சரிக்கை, உலக நாடுகளின் எதிர்ப்பு என்று எதையும் கண்டும் அஞ்சாமல், தளராமல் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியா ஒவ்வொரு முறை ஏவுகணை சோதனை நடத்தும் போதும் அதனை உன்னிப்பாக கவனித்து வரும் அமெரிக்கா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே நேரம், அமெரிக்காவுடன் நட்பு பாராட்டி வரும் அதன் அண்டை நாடான தென் கொரியாவின் ராணுவம், வடகொரியாவின் ஏவுகணை சோதனை பற்றி உடனடியாக தகவல்களை தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில், வடகொரியா நேற்று குறைந்த தொலைதூர ஏவுகணை சோதனையை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இது கடந்த 20 நாட்களில் வடகொரியா நடத்தும் 5வது ஏவுகணை சோதனையாகும்.

Related Stories: