சில்லி பாயின்ட்...

* ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் ஷபாலி வர்மா மீண்டும் நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றி உள்ளார். பெத் மூனி, மெக் லேன்னிங் (ஆஸி.), மந்தனா (இந்தியா) அடு த்த இடங்களை பிடித்துள்ளனர்.

* ஆஸி. ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் பிரான்ஸ் வீரர் கேல் மான்பில்சுடன் நேற்று மோதிய மேட்டியோ பெரட்டினி (இத்தாலி) 6-4, 6-4, 3-6, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் 3 மணி, 49 நிமிடம் போராடி வென்றார்.

* சூதாட்ட தரகர்கள் தங்களை அணுகுவது குறித்து தகவல் அளிக்கும் வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கம்பீர் வலியுறுத்தி உள்ளார்.

* புரோ கபடி தொடரில் நேற்று அரியானா ஸ்டீலர்ஸ் - தெலுகு டைட்டன்ஸ் மோதிய லீக் ஆட்டம் 39-39 என்ற புள்ளிக்கணக்கில் ‘டை’ ஆனது.

* காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த கேப்டன் ரோகித் ஷர்மா, வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள், டி20 தொடரில் விளையாட முழு உடல்தகுதியுடன் தயாராகி உள்ளதாக பிசிசிஐ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

* பாகிஸ்தான் சுற்றுப்பயணத்துக்கு முழு பலத்துடன் கூடிய ஆஸ்திரேலிய அணியை அனுப்ப கிரிக்கெட் ஆஸி. முடிவு செய்துள்ளது.

* கேமரூன் தலைநகர் யாவுண்டே கால்பந்து ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த போட்டியைக் காண ரசிகர்கள் முண்டியடித்ததில் ஏற்பட்ட அமளியில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Related Stories: