இந்தியாவில் முதல் முறையாக தலைமுடி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள்: கடத்தலை தடுக்க நடவடிக்கை

புதுடெல்லி: வெளிநாடுகளுக்கு கள்ளச்சந்தையில் கடத்தப்படுவதை தடுக்க, தலைமுடி ஏற்றுமதிக்கு முதல் முறையாக ஒன்றிய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உலகளவில் மனித தலைமுடி ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா, தமிழகத்தில் இருந்து அதிகளவில் தலைமுடி ஏற்றுமதி நடக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து சீனா, மியான்மர் போன்ற நாடுகளுக்கு கள்ளச்சந்தையில் தலைமுடி கடத்தப்பட்டு வருவதாக ஒன்றிய அரசுக்கு பல்வேறு தரப்பிலும் புகார்கள் வந்தன.

இதைத் தொடர்ந்து, தலைமுறை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, ஏற்றுமதியாளர்கள் இனி வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரலிடம் அனுமதி அல்லது லைசென்ஸ் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல் (டிஜிஎப்டி) சந்தோஷ் குமார் சாரங்கி, ‘‘எந்த வகையான தலைமுடியாக இருந்தாலும் அவற்றை இனி ஏற்றுமதி செய்ய உரிய அனுமதி அல்லது உரிமம் பெற வேண்டும்’’ என்றார். இதற்கு முன் தலைமுடி ஏற்றுமதிக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. இந்த நடவடிக்கையை மனித முடி மற்றும் முடி பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.

Related Stories: