காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்; 4 பேர் காயம்

ஸ்ரீநகர்: நாட்டின் குடியரசு தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் உடனான எல்லைப் பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஜம்மு பிராந்திய ஐஜி போரா நேற்று முன்தினம் கூறினார். இந்நிலையில், நகரில் பரபரப்பாக இயங்கும் ஹரி சிங் மேலத் தெருவில் பாதுகாப்பு ஊழியர்கள் மீது தீவிரவாதிகள் நேற்று மாலை 3.30 மணியளவில் கையெறிகுண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் அதிகாரி தன்வீர் ஹூசைன், முகமது ஷபி, அவரது மனைவி தன்வீரா, அஸ்மத் ஆகிய  2 பெண்கள் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.  தாக்குதல் நடந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: