×

சரக்கு விமானத்தில் 12 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து பெருமளவு கடத்தல் தங்கம் சென்னைக்கு வரும் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்படுவதாக ஒன்றிய வருவாய் புலனாய்வு அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் சோதனை நடத்தினர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் துபாயில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமான பார்சல்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது துபாயில் இருந்து சென்னை முகவரிக்கு வந்திருந்த ஒரு பார்சல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதில் தங்க கட்டிகள் இருந்தன. அதன் எடை 12 கிலோ. சர்வதேச மதிப்பு சுமார் ₹5 கோடி. அதிகாரிகள் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். போலி முகவரி கொடுத்து சென்னைக்கு இந்த தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் மர்ம கும்பலை தீவிரமாக தேடுகின்றனர்.

Tags : 12 kg gold seized from cargo plane
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...