சென்னை சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் ரயில் பகுதியாக ரத்து

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:சென்னை அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அவ்வழியாக செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.அதன்படி சென்னை சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் (22637, 22638) அதிவிரைவு ரயிலானது வருகிற 29 மற்றும் பிப்.5 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக   மாலை 4.50 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக வருகிற 28 மற்றும் பிப்.4 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலுக்கு பதிலாக ஜோலார்பேட்டைக்கு வந்து சேரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: