பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் பிப்ரவரி 2வது வாரத்தில் விரிவான விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உமாபதி மற்றும் வழக்கறிஞர் குமணன், இந்த விவகாரத்தில் அணை பாதுகாப்பு தொடர்பாக என்னென்ன விசாரிக்க வேண்டும் என எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. ஆனால் தற்போது வழக்கு திடீரென பட்டியலிடப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட மற்ற கேரள தரப்பு மனுதாரர்கள் தரப்பில், அணை தொடர்பான பாதுகாப்பு விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் குறித்து ஏதேனும் கூடுதலாக தகவல் தெரிவிக்க வேண்டுமானால் அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்யலாம் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கு பிப்ரவரி 2வது வாரத்தில் விரிவாக விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: