உளுந்தூர்பேட்டை அருகே கன்டெய்னர் லாரி மோதி 15 ஆடுகள் பலி

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது செம்பியன்மாதேவி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி குமார் என்பவர் இன்று அதிகாலை 100க்கும் மேற்பட்ட ஆடுகளை கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி ஆடுகள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 15 ஆடுகள் உயிரிழந்தது.

7 ஆடுகள் படுகாயமடைந்தது. இதனால் இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடன் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற எலவனாசூர் கோட்டை காவல் நிலைய போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: