தடகள வீரர் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருதான பரம் விசிஷ்ட் சேவா விருது; ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருதான பரம் விசிஷ்ட் சோவா விருது அறிவித்துள்ளது.  ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வரும் நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தினத்தையொட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தினத்தையொட்டி பரம் விசிஷ்ட் சேவா விருது அறிவித்து ஒன்றிய அரசு கவுரவித்துள்ளது.

ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வரும் நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தினத்தையொட்டி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். 2008 இல் பெய்ஜிங்கில் அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு, இந்தியாவின் இரண்டாவது தனிப்பட்ட தங்கம் இதுவாகும். நீரஜ் சோப்ராவுக்கு கடந்த ஆண்டு நாட்டின் உயரிய விளையாட்டு விருதான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: