பி.ஆர்.பாண்டியனுக்கு கொலை மிரட்டல்: திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார்

திருவாரூர்: தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குருசாமி, பொறுப்பாளர் வரதராஜன் ஆகியோர் நேற்று திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில், கர்நாடக மாநிலம் மேகதாது பகுதியில் அணை கட்ட வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் சார்பில் கடந்த 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை பேரணி நடந்தது. இதை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாயிகள் கடந்த 19ம் தேதி மேகதாது பகுதியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சமூக வலைதளங்கள் வாயிலாக பி.ஆர்.பாண்டியனுக்கு கொலை மிரட்டல் வருகிறது. எனவே மிரட்டல் விடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர். மனுவை பெற்ற போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Related Stories: