ஸ்மிருதி மந்தனாவுக்கு டெண்டுல்கர் வாழ்த்து

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2021ம் ஆண்டின் சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா வென்றார். இந்த வருடத்திற்கான சிறந்த டி 20 மகளிர் அணியை ஐ.சி.சி அறிவித்தது. 11 வீராங்கனைகள் அடங்கிய அணியில் இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா மட்டுமே தேர்வாகியிருந்தார். நேற்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்த இந்த ஆண்டுக்கான சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தட்டிச் சென்றார்.

25 வயதான ஸ்மிருதி மந்தனா கடந்த ஆண்டில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 22 போட்டிகளில் விளையாடி ஒரு சதம்,5 அரை சதம் உள்பட 855 ரன் அடித்தார். விருது பெற்ற மந்தனாவுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர், சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் ஒரு அற்புதமான ஆண்டாக அமைய மந்தனாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் சிறந்ததைத் தொடர்ந்து புதிய உயரங்களைத் தொடருங்கள், என பதிவிட்டுள்ளார்.

பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, இந்த விருதை இரண்டு முறை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றதற்காக வாழ்த்துக்கள்.  இந்த விருது அவரது கடின உழைப்பு மற்றும் நிலைத்தன்மையின் பிரதிபலிப்பாகும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: