செல்போனுக்கு ஆபாச வீடியோ: போலீசில் பெண் புகார்

பெரம்பூர்: சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த வாணி (32, பெயர் மாற்றப்பட்டுள்ளது) நேற்று பெரவள்ளூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: குறிப்பிட்ட ஒரு செல்போன் நம்பரில் இருந்து  என்னுடைய செல்போனுக்கு அருவருக்கத்தக்க வகையில் மெசேஜ், செக்ஸ் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.  அதை நான்  அழித்துவிட்டாலும் மீண்டும் மீண்டும் அனுப்பி வைக்கின்றனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு எனது எதிர்வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் என்னுடைய செல்போனை வாங்கி பேசினார்.

அதன்பிறகு தான்  என்னுடைய செல்போனுக்கு ஆபாச வீடியோக்கள் வருகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்து வருகிறேன். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகாரில் குறிப்பிட்டுள்ளார்.  புகாரை பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து  பெண்ணுக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பியது யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: