×

பெரம்பலூர் அருகே துப்பாக்கிச்சுடும் பயிற்சியின் போது வீட்டின் மேற்கூரையில் தோட்டா பாய்ந்ததால் அதிர்ச்சி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் நாராணமங்கலம் அருகே துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தில் திருச்சி ரயில்வே போலீசார் நேற்று பயிற்சி மேற்கொண்ட போது ஈச்சாங்காடு பகுதியில் உள்ள பாரதிதாசன் என்பவரின் வீட்டின் மேற்கூரையில் துப்பாக்கியின் தோட்டா பாய்ந்தது. இந்த துப்பாக்கிச்சுடும் பயிற்சியின் போது யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நேற்று திருச்சி ரயில்வே போலீசார் பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை துப்பாக்கிச்சுடும் பயிற்சி தளம் உள்ளது. அந்த துப்பாக்கிச்சுடும் தளத்தில் திருச்சி மண்டலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து துப்பாக்கிச்சுடும் பயிற்சி மேற்கொள்ளப்படும். நேற்று திருச்சி ரயில்வே போலீசார் உரிய அனுமதி பெற்று பயிற்சி எடுத்துள்ளனர். நேற்று முற்பகல் 11.30 மணியளவில் பயிற்ச எடுத்துக்கொண்டிருந்த போது மலையிலிருந்து சுமார் 1 கி.மீ பின்புறம் உள்ள ஈச்சாங்காடு பகுதியில் வயல்வெளிகளில் காட்டு கொட்டகைகள் உள்ளன.

அந்த பகுதியில் பாரதிதாசன் என்பவர் வீடு காட்டியுள்ளார். அவரது வீட்டின் மேற்கூரையில் ஒரு தோட்டா பாய்ந்துள்ளது. சத்தம் கேட்டதும் பார்த்தபோது தோட்டா மேற்கூரையை துளைத்து கொண்டு அப்படியே இருந்துள்ளது. இதுதொடர்பாக இவர்கள் பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இன்று பாடாலூர் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை செய்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் குடியிருப்பு பகுதிகளை தோட்டா பாய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் புதுக்கோட்டையில் தோட்டா பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தால் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகில் உள்ள பகுதிகளை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் பெரம்பலூர் எஸ்.பி மணி சம்பவத்தில் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

Tags : Perambalur , gun fire training
× RELATED பெரம்பலூர் அருகே சினிமா டைரக்டருக்கு கத்தி வெட்டு: 6 மர்ம நபர்களுக்கு வலை