தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது மாநில அரசின் நிதி, ஒன்றிய அரசின் வரிப் பகிர்வு, ஒன்றிய அரசின் நிதியுதவி, வங்கிகளிலிருந்து பெறப்படும் கடன் அனைத்தையும் உள்ளடக்கியது. இந்தச் சூழ்நிலையில், ஒன்றிய அரசிடமிருந்து அதிக நிதியைப் பெற்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுவதுதான் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் நன்மை பயப்பதாகும். அரசியலை புறந்தள்ளிவிட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் கடிதம் எழுதியுள்ள தமிழக முதலமைச்சர்  அனைத்துப் பணிகளையும் விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கும் என்று கூறியிருக்கிறார்.அதன்படி ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது கண்காணித்து தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: