கடலூர் அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி அருந்ததியர் சமூக மக்கள் போராட்டம்

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி அருந்ததியர் சமூக மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடியை அடுத்த தர்மகுடிகாடு பகுதியில் 60க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களது குடியிருப்புக்கு அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் அமைந்துள்ளது.

அந்த நிலத்தில் இலவச வீட்டுமனை அமைத்து அதற்கு பட்டா வழங்குமாறு அருந்ததியர் சமூகத்தினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து மின் இணைப்பு பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அருந்ததியர் சமூகத்தினர் அந்த நிலத்திற்கான இலவச வீட்டுமனை பட்டாவை தங்களுக்கு உடனடியாக வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: