மதுரையில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தன்னை துன்புறுத்தியதாக கூறி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

மதுரை: மதுரையில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தன்னை துன்புறுத்தியதாக கூறி தீக்குளித்து மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்த இளைஞர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். ஈஸ்வரன் என்ற இளைஞர் ஊரடங்கின் போதும், விடுமுறை தினங்களிலும் தனது வீட்டுக்கு அருகே சட்ட விரோதமாக  மதுபானங்கள் விற்பனை செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதாக நடத்தியதாக தெரிகிறது. காவல்துறையினர் வீடு புகுந்து சோதனை நடத்தியதாகவும், தனது மகனை சாலையில் வைத்தே தாக்குதல் நடத்தியதாகவும் ஈஸ்வரனின் தாய் தங்கம்மாள் குற்றம் சாட்டியிருந்தார்.

கடந்த 18 ஆம் தேதி ஈஸ்வரன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். 70% தீக்காயங்களோடு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன்னை காவல் துறையினர் அடிக்கடி மிரட்டுவதாகவும், பொய் வழக்கு பதிவு செய்யப்போவதாக மிரட்டியதாகவும் ஈஸ்வரன் தீக்காயங்களோடு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் சிகிக்சை பலனின்றி ஈஸ்வரன் உயிரிழந்தார்.

காவல்துறையினர் தாக்கியதால் தான், தன் மகன் தீக்குளித்ததாக புகார் தெரிவித்திருக்கும் ஈஸ்வரனின் தாய் தங்கம்மாள் இதற்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுயுள்ளார். ஈஸ்வரனிடம் மது விற்பனை குறித்து விசாரணை மட்டுமே நடத்தப்பட்டதாகவும், காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படவில்லை என்றும் காவல்துறையினர் விளக்கமளித்திருக்கின்றனர்.      

Related Stories: