உல்லாசத்துக்கு வர மறுத்ததால் ஆத்திரம் தலையில் கல்லை போட்டு மனைவி கொடூர கொலை-சடலத்தை அமராவதி ஆற்றில் வீச முயன்ற கணவர் கைது

உடுமலை :  மடத்துக்குளத்தில்  உல்லாசத்துக்கு வரமறுத்ததால் ஆத்திரமடைந்த கணவர்,  மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை கொலை செய்தார்.

 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊர்க்கவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் கணேசன் (58). இவரது மனைவி ஈஸ்வரி (54). இவரது மகன் தினேஷ்குமார் (29). ராஜஸ்தானில் வேலை பார்த்து வருகிறார். தம்பதியுடன் ஈஸ்வரியின் தாய் ராஜம்மாள் (80) என்பவர் வசித்து வருகிறார்.

கணவன்- மனைவி இருவரும் வீட்டில் நெசவு தொழில் செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலை முடிந்து சாப்பிட்டு தூங்கச்சென்றனர். நள்ளிரவு ஈஸ்வரி அயர்ந்து தூங்கினார். அப்போது எழுந்த கணேசன், மனைவியை உல்லாசத்தக்கு அழைத்தார். ஆனால், அதற்கு ஈஸ்வரி சம்மதிக்கவில்லை. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த கணவர், அருகில் கிடந்த கல்லை தூக்கி ஈஸ்வரியின் தலையில் போட்டார்.

இதில், தலைநசுங்கி ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். கொலையை மறைக்க ஈஸ்வரியின் உடலை அமராவதி ஆற்றில் வீசி எறிய முடிவு செய்தார்.

அதன்படி, வீட்டில் இருந்த தார்ப்பாயால் ஈஸ்வரி உடலை கட்டினார். அதற்குள் விடிய தொடங்கி விட்டதால் மேற்கொண்டு அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. ராஜம்மாள் காலையில் எழுந்து பார்த்தபோது மகள் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் இது குறித்து மடத்துக்குளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஈஸ்வரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் கல்லை போட்டு மனைவியை கொலை செய்த கணேசனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: