கந்தர்வகோட்டை பகுதியில் சம்பா நெல் சாகுபடி அமோக விளைச்சல்-விவசாயிகள் மகிழ்ச்சி

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் பகுதி சம்பா நெல் சாகுபடி அமோக விளைச்சல் இருந்த நிலையில் அதனை அறுவடை செய்து தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய விவசாயிகள் தயாராக உள்ளனர்.இந்தாண்டு மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியில் திறக்கப்பட்டதாலும், பருவமழையும் கைகொடுத்ததாலும் விவசாயத்திற்கு தண்ணீர் பிரச்னை ஏற்படவில்லை. இதனால் டெல்டா பகுதி மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் விவசாயம் நன்றாக இருந்தது.

கந்தர்வகோட்டை பகுதியில் இந்தாண்டு சம்பா சாகுபடி விலைச்சல் அமோகமாக இருந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தனியார் வியாபாரிகளும், இடைத்தரகர்களும் தலையீடு இருக்கக்கூடாது என்ற தமிழக அரசின் நல்ல எண்ணத்தின் பேரில் விவசாயிகள் அனைவரும் தாங்கள் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு செல்ல வேண்டும் என அறிவித்துள்ளது.

இப்பகுதியில் சர்வர் பிரச்சினையாலும், ஏழை விவசாயிகளுக்கு போதிய அனுபவம் இல்லாததாலும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய தெரியவில்லை. எனவே அரசு தனி கவனம் எடுத்துக்கொண்டு நெல் கொள்முதல் மையம் அருகிலேயே ஆன்லைனில் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய போதிய வசதி செய்து தரவேண்டும் என அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

கந்தர்வகோட்டை, வெள்ளாளவிடுதி, நெப்புகை ஆகிய நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகள் நெல்லை கொண்டு வந்து வைத்திருந்ததும் ஆன்லைனில் பதிவு செய்யாமல் உள்ளனர். ஆகவே நெல் கொள்முதல் செய்யும் அலுவலரே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: