வாலாஜா தாலுகா திருப்பாற்கடல் கிராமத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டும் பணி-மீட்கக்கோரி ஆர்டிஓவிடம் கிராம மக்கள் மனு

ராணிப்பேட்டை : வாலாஜா தாலுகாவுக்கு உட்பட்ட திருப்பாற்கடல் கிராமத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டும் பணி நடப்தை தடுத்து நடவடிக்கை எடுக்க கோரி ஆர்டிஓவிடம் கிராமமக்கள் மனு அளித்தனர்.வாலாஜா தாலுகா திருப்பாற்கடல் கிராமத்தில் கோயில் நிலத்தை மீட்கக்கோரி கிராம மக்கள் ராணிப்பேட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் கிராமத்தில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. கோயிலுக்கு அருகே உள்ள நிலத்தில் கோயிலுக்கு வந்து செல்லும் பொதுமக்கள்  மற்றும் வியாபாரிகள் விற்பனை செய்யவும், ஓய்வு எடுக்கவும், வாகனங்களை நிறுத்தவும் பயன்படுத்தி வருகின்றனர். திருக்கோயிலானது சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் வசதிக்கென தங்கும் விடுதி, சமுதாய கூடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த நபர் மோசடியாக பதிவு செய்து கோயில் நிலத்தை மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி மனு அளித்துள்ளோம்.இதனிடையே கோயில் நிலத்தை சமன் செய்து வீடு கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  எனவே, கோயில் நிலத்தை மீட்டு  கோயில் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: