தொடர் மழையால் மானாவாரி நிலங்களில் வெள்ளைச் சோளம் அமோக விளைச்சல்

பெரியகுளம் :  பெரியகுளம் பகுதியில் தொடர் மழையால், வெள்ளைச் சோளம் அமோகமாக விளைந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் மானாவாரி நிலங்கள் அதிகமாக உள்ளன. கடந்தாண்டு தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்ததால் மானாவாரி நிலங்களில் வெள்ளைச் சோளம், எள், பச்சைப்பயறு, தட்டான் பயறு, கேப்பை ஆகியவற்றை விவசாயிகள் அதிகமாக பயிரிட்டனர்.

 இந்நிலையில், 90 நாள் பயிரான வெள்ளைச் சோளத்திற்கு தொடர் மழை கிடைத்ததால் நல்ல விளைந்துள்ளது. அறுவடை செய்ய 20 நாட்கள் உள்ள நிலையில், நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related Stories: