3 ஆண்டுகளாக நீடிக்கும் கொரோனாவால் கடும் இழப்பு.. பிரபல அடையாறு கேட் ஹோட்டல் குடியிருப்பாகிறது!!

சென்னை : சென்னையில் அட்லான்டிக் உள்ளிட்ட நட்சத்திர ஹோட்டல்களை அடுத்து அடையாறு கேட் ஓட்டலும் அடுக்குமாடி குடியிருப்பு ஆகிறது. கொரோனா முடக்கத்தால் ஹோட்டலை நிர்வகிப்பதில் ஏற்பட்ட சிக்கலே இதற்கு காரணம். சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுவது அடையாறு கேட் 5 நட்சத்திர ஓட்டல். 286 அறைகளை கொண்ட இந்த ஹோட்டல், 1970களின் பிற்பகுதியில் கட்டப்பட்டது. இடையில் பார்க் ஷேரத்தன் என பெயர் மாற்றம் கண்ட இந்த ஹோட்டல், தற்போது கிரௌன் பிளாசா என அழைக்கப்படுகிறது.

என்றாலும் அடையாறு கேட் ஹோட்டல் என்றால் தான் அனைவருக்கும் தெரியும். சுமார் 50 ஆண்டுகளாக செயல்பட்ட இந்த ஹோட்டல் விரைவில், உயர்தர அடுக்குமாடி குடியிருப்பாக மாறுகிறது. இந்த ஹோட்டலை சீபுரோஸ் கட்டுமான நிறுவனம் வாங்க உள்ளதே இதற்கு காரணம். கொரோனாவால் ஓட்டல் தொழிலில் 3வது ஆண்டாக நீடிக்கும் முடக்கத்தால் தமிழகத்தில் 20% ஹோட்டல்கள் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன. அதற்கு கிரவுன் பிளாசாவும் தப்பவில்லை என்கின்றனர் தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள்.

Related Stories: