வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் கடுங்குளிர்: பனிகளை பந்து போல் உருட்டி விளையாடும் சுற்றுலாப் பயணிகள்

இமாச்சல பிரதேசம்: வட மாநிலங்களில் தொடர்ந்து கடும் குளிர் நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம் என இமயமலையை ஒட்டிய பகுதிகளில் பனி மழை கொட்டுவதால் எங்கு பார்த்தாலும் வெண்போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது. வீடுகள், மரங்கள், வாகனங்கள் என அனைத்து பகுதிகளிலும் பனி சூழ்ந்திருப்பது காண்பதற்கு ரம்மியமாக இருக்கிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் சாலைகளில் இருக்கும் பனிகளை பந்து போல உருட்டி ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ச்சியாக விளையாடி வருகின்றனர். அதேபோல் டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கடும் குளிர் வாட்டி வருகிறது. இதனால் சாலைகளில் தீமூட்டி பலர் குளிர் காய்ந்து வருகின்றனர். பனிமூட்டமும் அதிகரித்து இருப்பதால் சாலைகளில் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்கின்றன.            

Related Stories: