×

மராட்டியத்தில் பாலத்தில் இருந்து விழுந்து அப்பளம் போல நொறுங்கிய கார்!: மருத்துவ கல்லூரி மாணவர்கள் 7 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!!

செல்சுரா: மராட்டிய மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எம்.எல்.ஏ. மகன் உள்ளிட்ட 7 மாணவர்கள் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். சங்வி பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 7 பேர் விருந்து ஒன்றில் பங்கேற்றபின் வரதா நகரை நோக்கி நேற்று இரவு ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த வாகனம் இரவு 11:30 மணிக்கு செல்சுரா என்ற இடத்தின் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே பாய்ந்துள்ளது. பாய்ந்த வாகனத்தில் வேகம் பலமுறை உருண்டதால் அப்பளம் போல அந்த கார் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 7 மருத்துவ கல்லூரி மாணவர்களும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலியான இளைஞர்களில் மராட்டிய மாநில பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் விஜய் ரஹாங்டேவின் மகன் அவிஷ்கர் ரஹாங்டேலும் ஒருவர் என வரதா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் மாணவர்கள் பயணித்த கார் மீது காட்டுப்பன்றி மோதியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. விபத்தில் பலியான மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.


Tags : Maratha , Maratha, car, accident, medical college students, casualties
× RELATED 20 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை;...