தமிழகம் முழுவதும் சேதம் அடைந்த நிலையில் உள்ள 20,453 குடியிருப்புகளை இடிக்கவேண்டும் : அண்ணா பல்கலை. தொழில்நுட்ப குழு பரிந்துரை!!

சென்னை : தமிழகம் முழுவதும் சேதம் அடைந்த நிலையில் உள்ள 20,453 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை இடித்துவிட்டு மறுக்கட்டுமானம் மேற்கொள்ள அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப குழு பரிந்துரை செய்துள்ளது. சென்னை திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 3 அடுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் டிசம்பரில் இடிந்து தரைமட்டம் ஆனது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் மாநிலம் இங்குள்ள நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளின் நிலை குறித்து அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப குழு ஆய்வு மேற்கொண்டது. கட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலான 123 அடுக்குமாடி திட்டங்களில் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தார்கள்.

மொத்தம் உள்ள 22, 271 குடியிருப்புகளில் 20,453 குடியிருப்புகள் சேதம் அடைந்து இருப்பது கண்டறியப்பட்டது. சேதம் அடைந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு, மறு கட்டுமானம் செய்ய வேண்டும் என்று நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்திற்கு அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்பக் குழு பரிந்துரையை வழங்கி உள்ளது.

Related Stories: