பணவீக்கம் பற்றிய கேள்வியால் ஆத்திரமடைந்த பைடன்; நிருபரை திட்டி முணுமுணுத்ததால் சர்ச்சை

வாசிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நிதானத்தை இழந்து நிருபரை திட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகரித்துவரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த விதிகளில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பான செய்தியாளர்கள் கூட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அப்போது ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் பீட்டர் டூசி என்பவர் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்து இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜோ பைடன் செய்தியாளரை திட்டும் வகையில் முணுமுணுத்தார். எனினும் அவரது பேச்சு அங்கிருந்த மைக்ரோபோனிலும், காணொளியிலும் பதிவானதால் கூடியிருந்த சக செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கெனவே கடந்த வாரம் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதும், மிக அருமையான கேள்விகளை கேட்பதாக டூசியை பாராட்டுவதுபோல அதிபர் பைடன் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.      

Related Stories: