உலக நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம் :உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா : உலக நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் செயற்குழுவின் 150-வது அமர்வு நேற்று நடைபெற்றது. அதில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம்  பேசியதாவது,கொரோனா பெருந்தொற்று 3ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. உலகம் இக்கட்டான தருணத்தில் உள்ளது. உலக நாடுகள் ஒருங்கிணைந்து கொரோனாவின் கடுமையான கட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதற்கான தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் நம்மிடம் உள்ளன.

மேலும் கொரோனாவை ஒழித்து கட்டுவதில் பிராந்திய, தேசிய, சர்வதேச ரீதியாக உலக சுகாதார அமைப்பு பணியாற்றி வருகிறது. உலக நாடுகளுக்கு தேவையான ஆதாரங்கள், வியூகங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளித்து வருகிறது. உலக நாடுகள் நாடுகள் இந்த வியூகங்களை பயன்படுத்தி, விரிவான நடவடிக்கை எடுத்தால், நாம் இந்த ஆண்டிலேயே கொரோனாவுக்கு முடிவு கட்டலாம்.கொரோனாவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இதுபோன்ற நெருக்கடிகளை தடுக்க புதிய தீர்வுகளை உருவாக்க வேண்டும். தொற்று முடியும்வரை காத்திருக்கக்கூடாது, என்றார்.

Related Stories: