×

ஓமிக்ரான் வைரஸின் பிஏ.2 வகை தொற்றால் மத்தியப் பிரதேசத்தில் 6 குழந்தைகள் உட்பட 21 பேர் பாதிப்பு: இதில் 15 பேர் 2 தவணை தடுப்பூசி போட்டவர்கள்!!

புதுடெல்லி: தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை வைரஸ் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா 3வது அலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒமிக்ரான் வைரசே காரணமாகும். இதனால் தினசரி தொற்று பாதிப்பு 3 லட்சத்துக்கும் மேல் கடந்துள்ளது. இந்த நிலையில், ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸில் பிஏ.2 என்ற புதிய மரபணு மாறுபாடு
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பிஏ.2 வகை புதிய மரபணு மாறுபாடு வைரஸ் ஸ்வீடன், டென்மார்க் உள்பட 40 நாடுகளில் பரவி உள்ளது.

தற்போது இந்த வைரஸ் இந்தியாவில் பெரும்பாலானோருக்கு தொற்றி உள்ளது. இதை ஆர்டிபிசிஆர் பரி சோதனையிலும் கண்டறிய முடியவில்லை. மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் 6 குழந்தைகள் உட்பட 21 பேருக்கு இந்த புதிய மாறுபாட்டால் கொரோனா தாக்கி இருப்பது உறுதி ஆகியுள்ளது. ஒரு தனியார் ஆய்வு கூடத்தில் கடந்த 6ம் தேதி முதல் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 பேருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 3 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 18  வயதை தாண்டிய 15 பேரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


Tags : ஒமிக்ரான், வகை, வைரஸ்,கொரோனா
× RELATED பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களால்...