சென்னையில் 20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும் :தொழில்நுட்ப வல்லுநர் குழு

சென்னை : சென்னையில் சேதமடைந்த நிலையில் உள்ள 20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும் என்று நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் அறிக்கையைத் தாக்கல் செய்தது தொழில்நுட்ப வல்லுநர் குழு. திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்த பின், மாநிலம் முழுவதும் உள்ள 22,271 குடியிருப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வின் அடிப்படையில் 22,271 குடியிருப்புகளில் 20,453 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால், அவற்றை உடனடியாக இடித்து மறுகட்டுமானம் மேற்கொள்ள வேண்டும் என்று தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

Related Stories: