நகைக்கடனில் ரூ.1.64 கோடி மோசடி கூட்டுறவு வங்கி செயலாளர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிபவர் கலைச்செல்வி (58). சூபர்வைசராக ஜெய (51), நகை மதிப்பீட்டாளராக விஜயகுமார் (47) பணிபுரிகின்றனர். 3 பேரும் இணைந்து கடந்த 2019, டிசம்பர் 18ம் தேதி முதல் 2021, மார்ச் 29ம் தேதிவரை வங்கியின் உறுப்பினர்கள் 24 பேரிடம் கவரிங் நகைகளை பெற்று, ₹1,64,83,500 மதிப்பில் 38 வகையான நகைக்கடன் வழங்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக துணைப்பதிவாளர் சுவாதி சென்னையில் உள்ள வணிக குற்றப்புலனாய்வு பிரிவில், 3 பேர் மீது புகார் அளித்தார். அந்த புகாரை காஞ்சிபுரம் டிஎஸ்பி முரளி தலைமையில் போலீசார் விசாரித்தனர். அதில், ₹1.64 கோடி மோசடி செய்தது உறுதியானது. இதை தொடர்ந்து வங்கியின் செயலாளர் கலைச்செல்வி, நகை மதிப்பீட்டாளர் விஜயகுமார்ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சூபர்வைசர் ஜெய தலைமறைவானார் இந்நிலையில் 3 பேரும் பணியிடை நீக்கம் செய்ய பட்டுள்ளனர்.

Related Stories: