×

கூட்டுறவுத்துறையில் பணி நிரந்தரமாக்குவதாக ரூ.1 லட்சம் வாங்கி மோசடி அதிமுக நிர்வாகி மீது வழக்கு

திருவள்ளூர்: கடம்பத்தூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன்(44). மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் கணினியில் தற்காலிக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே கூட்டுறவுத்துறையில் நிரந்தரமாக்கி பணி வழங்ககோரி கடம்பத்தூர், கசவநல்லாத்தூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி ரமேஷ் என்பவரை அணுகியுள்ளார். அப்போது அதிமுக நிர்வாகி ரமேஷ் ₹4 லட்சம் கொடுத்தால் கூட்டுறவுத்துறையில் நிரந்தரமாக்கி விடுவதாக கூறியுள்ளார். எனவே இதற்காக அட்வான்ஸ் தொகையாக ₹1 லட்சம் கொடுக்குமாறு ரமேஷ் கேட்டுள்ளார். இதனை நம்பி கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் ₹1 லட்சம் ஈஸ்வரன் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இதுவரை கூட்டுறவுத்துறையில் பணியையும் நிரந்தரம் செய்யாமல் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். பலமுறை கேட்டும் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்காததால் ஈஸ்வரன் கடம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.  அதன்படி மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில் டிஎஸ்பி சந்திரதாசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : AIADMK , Case filed against AIADMK executive for fraudulently buying Rs 1 lakh to make work permanent in the co-operative sector
× RELATED அதிமுக சார்பில் மாநிலங்களவைத்...