வனப்பகுதியில் கொட்டப்படும் குப்பை, கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு: விலங்குகள் அழியும் அபாயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பழவேலி வனப்பகுதியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதுடன், விலங்குகளும் அழியும் அபாய நிலை உள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பழவேலி பகுதியில் உள்ள வனப்பகுதியில் குப்பை மற்றும் கழிவுகளை சிலர் தினமும் கொட்டி செல்கின்றனர். குறிப்பாக, மகேந்திரா சிட்டி மற்றும் பொத்தேரி பகுதியில் இயங்கும் தனியார் நிறுவனங்கல் சேரும் குப்பை கழிவுகள் இரவோடு இரவாக, வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், யாருக்கும் தெரியாமல் வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். இதனால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வனப்பகுதியில் காணப்படும் மான், குரங்கு உள்பட பல்வேறு விலங்குகள், இங்கு கொட்டப்படும் கழிவுகளை உண்பதால், கடுமையாக பாதிக்கப்பட்டு, உயிரிழக்கின்றன. இதுகுறித்து,  பலமுறை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை  ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில்  கொட்டப்படும் குப்பைகளால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் வன உயிரினங்களும் அழிவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: