பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி பதவியேற்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் முதல் முறையாக  பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.  பாகிஸ்தான் வரலாற்றில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பெண் நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த விழாவில் நீதிபதி ஆயிஷா மாலிக் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் ஹார்வர்டு பல்கலையில்  பயின்று பட்டம்  பெற்றவர்.

லாகூர் உயர்நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக பணியாற்றி சொத்துகுவிப்பு மற்றும் விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவற்றில் சிறப்பான தீர்ப்புக்களை வழங்கியிருக்கிறார். இது தொடர்பாக பெண் உரிமை ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘நீதிபதி ஆயிஷா மாலிக் நீதித்துறை அமைப்பில் இருந்த அனைத்து தடைகளையும் உடைத்துள்ளார். இதன் மூலமாக நீதித்துறையில் உள்ள மற்ற பெண்களும் முன்னேற வழிவகை கிடைத்துள்ளது” என தெரிவித்துள்ளனர்.

Related Stories: