ஜெர்மனி பல்கலை.யில் மர்மநபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிசூடு

பெர்லின்: ஜெர்மனியின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் நேற்று கருத்தரங்கம் நடந்து கொண்டிருந்தது. அப்போது கருத்தரங்கு அறைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் தனது துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தார். அங்கிருந்த மாணவர்கள் அலறி அடித்தபடி அறையிலிருந்து தப்பி ஓடினர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். துப்பாக்கிய சூடு நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் போலீஸ் தரப்பில் எந்த தகவலும் உறுதிபடுத்தப்படவில்லை. இந்த சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எதற்காக மர்ம நபர் துப்பாக்கி சூடு காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: